Home செய்திகள் புதிய LPG இணைப்பு வேண்டுமா? 8454955555க்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

புதிய LPG இணைப்பு வேண்டுமா? 8454955555க்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

by mohan

மதுரை இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர், இந்தியா முழுவதற்குமாக, புதிய LPG இணைப்பைப் பெறுவதற்கான மிஸ்டு கால் வசதியை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். Indane LPG வாடிக்கையாளர்கள், பதிவு செய்யப்பட்ட போன் நம்பரிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து LPG ரீபிலை புக் செய்து கொள்ளலாம்.பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குக்கு மற்றும் வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிக்கு ஏற்ப, இந்தியன்ஆயில் நிறுவனமானது, அனைத்து டொமெஸட்டிக் வகை வாடிக்கையாளர்களுக்கு புதிய LPG இணைப்பைப் பெறுவதற்கான மிஸ்டு கால் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. நாடெங்கிலும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், 8454955555 எண்ணுக்கு மிஸ்டு கொடுத்தால் போதும். ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளில், தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதியை இந்தியன்ஆயில் மட்டுமே அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரீபில் புக்கிங் செய்வதற்கும் புதிய இணைப்புகளுக்கும் மிஸ்டு கால் வசதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்கல் ஏதுமில்லாத இந்த மிஸ்டு கால் வசதி, புதிய இணைப்பு பதிவு செய்வதற்கு, வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், சௌகர்யமானதாகவும் இருக்கும். மூத்த குடிமக்களுக்கும் ஊரகப் பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.LPG ரீபில் புக்கிங் செய்வதற்கும் பேமென்ட் செலுத்துவதற்கும், இந்தியன்ஆயில் நிறுவனமானது, தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை உபயோகத்தில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS), IndianOil One App என்கிற செயலி மூலமாக அல்லது https://cx.indianoil.in என்கிற வலைதளம் மூலமாக புக் செய்து பேமென்ட் செலுத்தலாம். வாட்ஸ்அப் எண் 758888882 மூலமாக, SMS / IVRS (7718955555) மூலமாக வாடிக்கையாளர்கள் புக் செய்து பேமென்ட் செலுத்தலாம். அல்லது Amazon & Paytm தளங்களில் Alexa மூலமாகவும் புக் செய்து பேமென்ட் செலுத்தலாம்.வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லத்திலேயே, இரட்டை இணைப்பு பெறும் வசதியையும் (Double Bottle Connection) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிங்கள் கனெக்‌ஷன் (SBC) வைத்துள்ளவர்களுக்கு இரட்டை சிலிண்டராக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை டெலிவரி பணியாளர் எடுத்துக் கூறுவார். இரண்டு சிலிண்டர் முறைக்கு மாறிக் கொள்ளலாம் அல்லது வழக்கமான 14.2 கிகி சிலிண்டருக்குப் பதிலாக, தயார் நிலைக்காக, 5 கிகி சிலிண்டர் பெறும் வழிமுறைறையும் அவர்கள் பெறலாம் என்று இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் S.M. வைத்யா தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!