அண்ணா நகர் பகுதியில் பிளாஸ்டிக் கயிறு தாயரிக்கும் கம்பெனியில் .1 லட்சத்து 13 ஆயிரம் திருட்டு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குப்புசாமி ராஜா தெரு சேர்ந்த வேலாயுதராஜா மகன் சூரியநாராயணன் வயது 45 .இவர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் அக்க்ஷயா பாலிமர் என்ற பெயரில் பிளாஸ்டிக் கயிறு (சுட்லி ) தயாரிக்கும் கம்பெனி கடந்த 20 ஆண்டுகளாக நடந்தி வருகிறார் .கம்பெனியில் வழக்கம்போல் வேலை ஆட்கள் பணி முடிந்து இரவு வீட்டுக்குச் சென்று விட்டனர் .மறுநாள் காலையில் கம்பெனி திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த ஒரு லட்சத்து 13 ரூபாய் பணம் கம்ப்யூட்டர் மானிட்டர் திருட்டு போனதை அறிந்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..