Home செய்திகள் பாசன கால்வாய்களை தூர் வாராததால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

பாசன கால்வாய்களை தூர் வாராததால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதனால் ரோடுகளில் மழைத் நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது புதிதாக கட்டப்பட்ட வீடுகள் உள்ள தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது இதனால் அங்கு குடியிருப்பவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகே தேனூர் கால்வாயில் தூர்வார படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது இதனால் மழைத் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் தொழில் நிறுவனங்களிலும் சூழ்ந்தது வாகனத்தில் செல்பவர்கள் தண்ணீரை கடந்து சென்றபோது சிரமப்பட்டனர்இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிற்றரசு 52 என்பவர் கூறும்போதுநேற்று பெய்த கனமழைக்கு வடிகாலில் தண்ணீர் செல்ல முடியாமல் எங்கள் தேங்காய் கிட்டங்கியில் மழைநீர் புகுந்ததால் நாங்கள் குவித்து வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் தண்ணீரில் அடித்துச் சொல்லப்பட்டது மீதி இருந்த தேங்காயை மழைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது இதனால் எங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஏற்கனவே கொரோணா காலத்தில் தேங்காய் விற்பனை இல்லாமல் பல்வேறு சிரமத்துக்கு ஆளாக்கப்பட்ட நேரத்தில் மழைத் தண்ணீர் செல்ல வழியில்லாமல் புதிதாக பிளாட் போட்டு உள்ளவர்கள் வாய்க்காலை மூடி உள்ளதால் தண்ணீர் கடந்து செல்ல முடியாமல் எங்கள் பகுதியில் மழை நீர் புகுந்து தேங்காய்கள் அனைத்தும் மழை நீரில் இழுத்துச் சொல்லப்பட்டது மீதி உள்ள தேங்காய் களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது குறிப்பாக இந்தப் பகுதியில் வீடு கட்டி உள்ளவர்கள் முறையாக மழைநீர் வடிகால் அமைக்காமல் வீடு கட்டி உள்ளதால் மழைக்காலங்களில் இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனக் கூறுகிறார்இது சம்பந்தமாக சென்றமுறை பேரூராட்சியில் புகார் கொடுத்தும் முறையாக நடவடிக்கை எடுக்காததால் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கு இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது என்று தெரிவித்தார்மேலும் சோழவந்தானில் இருந்து தேனூர் வரை செல்லும் பாசன கால்வாயை முறையாக குடிமராமத்து செய்து மழைக்காலங்களில் வரும் தண்ணீரை தேனூர் கால்வாய் மூலம் வைகை ஆற்றில் கொண்டு சேர்க்க வேண்டும் ஆனால் தற்போது தேனூர் பாசன கால்வாய் அருகில் வீடு வாங்குபவர்கள் தங்களது காலி இடத்தில் உள்ள கருவேல மரங்களை தோண்டி பாசன கால்வாயில் போடுவதால் பாசன கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைக் காலங்களில் வீடுகளில் தண்ணீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com