நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க கோரி, காங்கிரஸ் கட்சி போராட்டம்.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் ரயில் நிலையம் முன்பாக, மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக முற்றுகை போராட்டம் நடந்தது. .இப்போராட்டத்திற்கு, அமைப்புசாரா தொழிலாளர் மாவட்டத் தலைவர் சோணமுத்து தலைமை தாங்கினார்.மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி செல்லப்பா சரவணன், சிறுபான்மையர் பிரிவு தொகுதி துணைத் தலைவர் வருஷமுகமது,வட்டாரத் தலைவர்கள் காந்தி,ராயல், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் எஸ்.எஸ் குருசாமி முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். சுதந்திர காங்கிரஸ் தொழிலாளர் மாநிலத் தலைவர் கரடி, மனித உரிமை துறை ஜெயமணி,குருவித்துறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சீனிவாசன், மேலக்கால் அழகுபிள்ளை,முகமது இஸ்மாயில், ஜோசப்,முருகன் ஆகியோர் முற்றுகைப் போராட்டம் குறித்து பேசினார்கள்.இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன் ஒட்டுக்கேட்பு கண்டித்து,நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்,ஊரடங்கு வாழ்வாதாரம் பாதித்துள்ளது.இதனால், தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்