இராஜபாளையத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு புகைப்பட கலைஞர்களை ஒருங்கிணைந்து சங்கத்தை உருவாக்கிய முன்னாள் தலைவருக்கு மலர் அஞ்சலி .

இராஜபாளையம் ஸ்டுடியோ & வீடியோ கலைஞர்களின் நல சங்கத்தின் சார்பாக புகைப்பட கலைஞகளின் நலச்சங்கத்தை 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியவர்களில் முதன்மையான முன்னோடியாகவும் பல புகைப்பட கலைஞர்களை உருவாக்கிய அருண் ஸ்டுடியோ உரிமையாளர் எஸ் .ஏ. இராஜேந்திரன் அவர்களின் மறைவை நினைவு கூறும் விதமாக அன்னாரது திருஉருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இராஜபாளையம் ஸ்டுடியோ & வீடியோ கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் இபிஎஸ் குமார் தலைமையில் மாவட்ட தலைவர் மோகன்ராம் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஆறுமுகம் (எ) துரைராஜ் .மற்றும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண் டு அண்ணாரது சிறந்த பண்புகளை நினைவுகூர்ந்து எடுத்துரைத்தனர். அண்ணாரது மூத்த புதல்வர் வழக்கறிஞர் கண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தம் தந்தையின் நினைவுகளை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இராஜபாளையம் ஸ்டுடியோ & வீடியோ கலைஞர்களின் நல சங்கத்தின் சார்பில் தற்போதைய விலைவாசி உயர்வால் புகைப்பட கலைஞர்கள் மிகவும் சிறமபட்டு வருவதை அடுத்து திருமண நிகழ்ச்சி வீடியோ . போட்டோ மற்றும் ஸ்டுடியோ சிட்டிங் போட்டோ விலை உயர்த்தி தீர்மானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.செய்தியாளர் வி காளமேகம்