திருமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளருக்கு, ரயில்வே அமைச்சர் உத்தரவின்படி வழங்க வேண்டிய ரூபாய் 1 கோடியே 25 லட்சம் பணம் வழங்காததால்வேதனை.

திருமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளருக்கு, ரயில்வே அமைச்சர் உத்தரவின்படி வழங்க வேண்டிய ரூபாய் 1 கோடியே 25 லட்சம் பணம் வழங்காததால்வேதனை – பணமின்றி உடல் நல குறைவில் உள்ள மனைவியுடன் மிகவும் கஷ்ட நிலையில் வாழ்வதாலும், தனது வீட்டை சிலர் அபகரிக்கும் முயற்சி செய்து, தன்னை கொலை மிரட்டல் செய்து வருவதாகவும் திருமங்கலம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கிராமத்தைச் சார்ந்த, 33 ஆண்டுகள் தென்னக ரயில்வே பொறியாளராக பணியாற்றி ஒய்வு பெற்ற முத்துக் கருப்பன்(62), தனக்கு வரவேண்டிய ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணமும், ஓய்வு பெற்ற பணத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் தராமல் இருப்பதாலும் , தனது மனைவியுடன் உடல்நிலை சரியில்லாத நிலையத்தில் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பாதித்துள்ளதாகவும்,முத்துக்கருப்பன் ,மதுரை ரயில்வேயில் A கிரேடு அமைப்பில் பொறியாளர் பணியாற்றி 33 ஆண்டுகள் வேலை செய்து , தனது பணிநீக்கம் காரணமாக இவருக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தரவேண்டிய ரூ 1.கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் தராமல் இருப்பதால், இவர் இந்திய கவர்னருக்கு மனு அளித்தார் .அந்த மனுவின் விசாரணையில் இவருக்கு சேர வேண்டிய தொகையை அளிக்கும்படி 2019 டிசம்பர் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது . இந்த பணத்தை ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும் தரும்படி கூறியும், இவருக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ரயில்வே நிர்வாகம் வழங்கவில்லை எனவும்,இந்நியில் தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் , தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த முத்துக் கருப்பன், இவருக்கு தரவேண்டிய தொகையை கருணை அடிப்படையில் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.இதனிடையே இவர் வசிக்கும் வெள்ளாகுளம் கிராமத்தைச் சார்ந்த வீட்டை, சிலர் அபகரிக்கும் முயற்சி செய்ததுடன், தன்னை கொலை மிரட்டல் செய்து வருவதாகவும் கூறி, திருமங்கலம் நீதிமன்றத்தில் முத்துக்கருப்பன் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்