மாணவர்களுக்கான ஆன்லைன் பெட்டிகள்: மதுரை மாநகராட்சி ஏற்பாடு.

மதுரை மாநகராட்சிகொரோனா விழிப்புணர்வு குறும்படம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் போட்டிகளை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், துவக்கி வைத்து பார்வையிட்டார்.மதுரை மாநகராட்சி மற்றும் விஷன் கிரியேட்டர்ஸ் இணைந்து விஷால் டி மகாலில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், இன்று (05.08.2021) துவக்கி வைத்து பார்வையிட்டனர்.தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாநிலம் முழுவதும் தொடர் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், விழிப்புணர்வு பிரச்சாரத்தை 31.07.2021 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, 01.08.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டிகள் நடத்துதல், குறும்பட போட்டிகள், ஓவியப் போட்டிகள், விழிப்புணர்வு வாசகப்போட்டி, மீம்ஸ் போட்டி, கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்;டு வருகிறது.அதன்படி, மதுரை மாநகராட்சி மற்றும் விஷன் கிரியேட்டர்ஸ் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்பட போட்டி ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு அப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவானதுவிஷால் டி மகாலில், நடைபெற்றது.இந்த குறும்படத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், வருமுன் காப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து சிறந்த காட்சிகள் ஏற்படுத்திய குறும்படங்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு சிறந்த குறும்படத்திற்கான முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வழங்கினார்கள்.கொரோனா விழிப்புணர்வு வாரவிழாவின் தொடர்ச்சியாக, இன்று (05.08.2021) ரோட்டரி கல்யாண மகாலில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் மற்றும் வாசக போட்டிகள் ஆன்லைன் மூலம் ஆணையாளர்,துவக்கி வைத்து பார்வையிட்டார். இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓவியம் மற்றும் வாசகங்களை ஏற்படுத்தும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், கல்வி அலுவலர்பொ.விஜயா, நகர்நல அலுவலர் மரு.குமரகுருபரன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், விஷன் கிரியேட்டர்ஸ் நிறுவனர்பிரியதர்ஷினி, மேலாண்மை இயக்குநர்பீமராஜ், ரோட்டரி கிளப் நிறுவனத் தலைவர்கள்ஆர்.ஜெயக்கண்,அந்தோணி பிரேம்குமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்