மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், ஆக.2..ம் தேதி முதல் ஆக.8..ம் தேதி வரை பக்தர்கள் அனுமதி கிடையாது:

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், அழகர்கோவில், பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் வருகின்ற 02.08.2021 முதல் 08.08.2021 வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திற்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக திருக்கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும், பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இந்தத் திருவிழா மற்றும் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்