
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் நான்கு வழி சாலையில் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற சுரேஷ்குமார் (வயது 46) தடுப்பு சுவரில் மோதி பலியானார் .மதுரை மேல பொன்நகரத்தை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் சுரேஷ்குமார் என்பவர் தனது டூவீலர் பைக்கில் மதுரையிலிருந்து நான்கு வழி சாலை வழியாக திருமங்கலம் நோக்கி செல்லும்போது தனக்கங்குளம் பிரிவில் தடுப்பு சுவரில் மோதினார்மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.பலியான சுரேஷ்குமார் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.