ராஜபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்றல் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் தமிழக அரசு 7 லட்ச ரூபாய் மானியம் மத்திய அரசு ஒன்றரை லட்ச ரூபாய் மானியத்துடன் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பு ஆக்கிரமிப்பை அகற்றி அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறதுஇந்த கட்டுமான பணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ராஜபாளையம் வட்டாச்சியர் ராமச்சந்திரன் குடிசை மாற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்ஆய்வு செய்த பொழுது அடுக்குமாடி குடியிருப்புகளில் சமையறை ஒட்டி கழிப்பறை மற்றும் குளியலறை கட்டியதை மாற்றியமைத்து படுக்கை அறையுடன் சேர்ந்து குளியலறை மற்றும் கழிப்பறை கட்ட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை வைத்தார்இதையடுத்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பின்பு சட்டமன்ற உறுப்பினர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் குடிசை மாற்றுவாரியம் அமைக்கப்பட்டு பல பயனாளிகள் பயன்படுத்துகின்றனர்அதனடிப்படையில் ராஜபாளையம் பகுதியில் 864 வீடு கட்டப்பட்டுள்ளது இது வீடு இல்லாத ஏழைகளுக்கு அளிக்கப்படும் மேலும் பல வீடுகள் கட்டுவதற்கு நிலங்கள் கையகப்படுத்த பட்டு வருகிறது ஆகையால் வீடில்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக யாரும் கூறினால் நம்ப வேண்டாம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் தற்போது ராஜபாளையம் பகுதியில் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் சட்டவிரோத செயல்களை சிலர் ஈடுபட்டு வருவதாகவும் ஆகையால் பொதுமக்கள் யாரும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..