போத்தனூரில் உள்ள தெற்கு ரயில்வே சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு துறை பணிமனைக்கு ஐந்து தரச்சான்றிதழ்கள் கிடைத்ததற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பாராட்டு .

தெற்கு ரயில்வேக்கான சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ளது. இந்த 62 வயது பணிமனை தர மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, மின் பயன்பாட்டு மேலாண்மை, உணவு பாதுகாப்பு மேலாண்மை ஆகியவற்றுக்கான 5 தரச்சான்றிதழ்களை பெற்றுள்ளது.இந்த ஐந்து ஒருங்கிணைந்த மேலாண்மை தரச் சான்றிதழ்களை புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான சர்வதேச சான்றுறுதி சேவை அமைப்பு வழங்கியுள்ளது. திருச்சி பொன்மலையில் சிறிய பழுதுபார்க்கும் அமைப்பாக இருந்த இந்த பணிமனை 1958ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்போத்தனூருக்கு மாற்றப்பட்டது.பழுது நீக்கும் அமைப்பாக இருந்த இந்த பணிமனை 1968 ஆம் ஆண்டு முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் பணிமனையாக ஆக மாறியது. மின் சமிக்ஞை கருவி, மின் சமிக்ஞை மாற்றி, இரு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்களை இயக்க பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட் கருவிகள், சமிக்ஞை தொடர் இணைப்புகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பெரிய பணி மனையாக உருவாகியது.இங்கு தயாரிக்கப்படும் சமிக்ஞை கருவிகள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பயன்பாட்டிற்கு அனுப்ப்பட்டு வருகிறது. 1978 ஆம் ஆண்டு முதல், ரயில் நிலையங்களில் ரயில் நுழையும்போது தண்டவாளங்களில் சக்கரங்களை எண்ணும் மின்னணு கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.லக்னோவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி வடிவமைப்பு அமைப்பு வழங்கும் வழிகாட்டுதலின்படி நவீன சமிக்ஞை கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருவிகள் மூலம் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த ஐந்து மேலாண்மை தரச் சான்றிதழ்களை பெற்ற பணிமனை மேலாளரும், முன்னாள் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளருமான பி.வி. முரளி கிருஷ்ணா மற்றும் ஊழியர்களுக்கும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பாராட்டு தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்