
அஇஅதிமுக தலைமைகழகத்தின் ஆணையின்படி இன்று தமிழகம் முழுவதும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக இராஜபாளையம் நகர் பகுதியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வீட்டின் முன்பு திமுகவிற்கு எதிராக பொதுமக்களை ஏமாற்றி தேர்தல் வாக்குறுதிகளை அளித்து விட்டு அதை நடைமுறைப்படுத்த தவறிய திமுக அரசு முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், திமுகவிற்க்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்ஆர்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகேசன் நகர செயலாளர் பாஸ்கர் ராஜ்உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.மேலும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி மற்றும் நவரத்தினம் பேரூராட்சி அதிமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், செட்டியார்பட்டி பேரூராட்சி கழகச் செயலாளர் அங்குதுரை தலைமையில் 30க்கும் மேற்பட்ட நகர் மற்றும் ஒன்றிய கிராம பஞ்சாயத்துக்களில் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என வீட்டின் முன்பு திமுக அரசை கண்டித்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.