
மதுரை வைகை கரையோரங்களில் இருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால்வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இது தொடர்பாக மாநகராட்சி பகுதிகளில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.அதேபோல் நகர்ப்பகுதிகளில் வைகை ஆற்றில் நடைபெறும் மேம்பால பணிகள் நிறுத்தப்படுகிறது.மேலும் தண்ணீர் அதிக அளவில் வரும் பட்சத்தில் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.