மதுரை மாநகராட்சியின் டென்டர் திடீர் ரத்து!

மதுரை மாநகராட்சியின் தினசரி வாரசந்தைகள், வாகன காப்பகங்கள், குளியலறை, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான டென்டர் ஏலம் மதுரை மடீட்சியா அரங்கில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.ஏலத்தில், பங்கேற்போர், ஒட்டப்பட்ட கவரில் ஏலத்தொகையை பூர்த்தி செய்து பெட்டியில் போட்டு கொண்டுருந்த நிலையில், திடீரென்று அலுவல் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி டென்டர் ரத்து என மாநகராட்சி அறிவித்தது.ஏலம் மறுதேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஏலமெடுக்க காலையிலிருந்து காத்திருந்தவர்கள் எரிசலுடன் ஏமாற்றமடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்