Home செய்திகள் தோப்பூரில் இருந்து கழிவுநீர் கொண்டு செல்வதற்காக புதிதாக கழிவுநீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து, ஆணையாளர் ஆய்வு:

தோப்பூரில் இருந்து கழிவுநீர் கொண்டு செல்வதற்காக புதிதாக கழிவுநீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து, ஆணையாளர் ஆய்வு:

by mohan

மதுரை மாநகராட்சி துணைக்கோள் நகரம் உச்சப்பட்டி தோப்பூரில் இருந்து அவனியாபுரம் வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீரினை கொண்டு செல்வதற்காக புதிதாக கழிவுநீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,ஆய்வு மேற்கொண்டார்.மதுரை மாநகராட்சி துணைக்கோள் நகரமான உச்சப்பட்டி தோப்பூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பல்வேறு நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.மேலும், நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது.அதன்படி, அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை அவனியாபுரம் வெள்ளக்கல்லில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டம் தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி, தோப்பூரில் இருந்து அவனியாபுரம் வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பங்களிப்புடன் ரூ.17.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக குழாய்கள் பதிக்கும் பணிகள் மூன்று சிப்பங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்றுவரும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாநகராட்சி அரசரடி குடிநீரேற்று நிலையத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் செயல்பாட்டினையும், குடிநீரேற்று நிலையத்தில் குடிநீரினை பிடித்து செல்லும் குடிநீர்; லாரிகளில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதையும், பொதுமக்களுக்கு குடிநீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கோச்சடையில், செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும், மேலும் மேலக்கால் குடிநீரேற்று நிலையத்தில் வைகை ஆற்றின் படுகையில் இருந்து நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு, குடிநீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர்கள் கருப்பாத்தாள், உதவி செயற் பொறியாளர் (குடிநீர்)அலெக்ஸ்சாண்டர்,கருத்தப்பாண்டியன், உதவிப் பொறியாளர்கள்தேவராஜன்,மயிலேறிநாதன்,மணியன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com