Home செய்திகள் உலகத்திலேயே சிறந்த மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பது முதல்வர் முக ஸ்டாலினின் இலக்கு: ஆய்வுக் கூட்டத்தில் நிதியமைச்சர் பேச்சு.

உலகத்திலேயே சிறந்த மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பது முதல்வர் முக ஸ்டாலினின் இலக்கு: ஆய்வுக் கூட்டத்தில் நிதியமைச்சர் பேச்சு.

by mohan

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சார்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுவாக நிதி மேலாண்மையும், ஆளுமையும் நல்லாட்சியும் ஒன்றாக செயல்பட வேண்டும். நிதியை தேவையான அளவில் ஈட்டுவது அதனை முறையாக ஈட்டுவது யாரிடமும் இருந்து எவ்வளவு நிதி ஈட்ட  வேண்டும் இதனை சரியாக செயல்படுத்துவதுதான் அரசாங்கத்திற்கு அழகு. துறை அமைச்சர் தெரிவித்தபடி அடிப்படை பொருளாதாரம் படித்தால் மூலதனச் செலவு எந்தெந்த மாநிலம் அதிகமாக்குகிறதோ, அந்தந்த மாநிலங்களில் வளர்ச்சி இருக்கும். இந்த துறையை பொறுத்தவரை சாலைகள், சிறு துறைமுகங்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி தனியார் முதலீடு ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்கும். உற்பத்தி திறன் அடிப்படையில் 14வது நிதிக்குழு, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தணிக்கை குழு ஆகியவை ஒரு பொதுவான கருத்தை முன்வைத்துள்ளது. 2016- 2021 கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் வருமானம் உற்பத்தியில் 10 சதவீதமாக இருந்தது. 6.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. திமுக தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 11.5 சதவீதமாக இருந்த வருமானம் தற்போதைய காலகட்டத்தில் 7.5 சதவீதமாக குறைந்துவிட்டது. கொரோனா  காலத்தில் 6.5 சதவீதமாக குறைந்துவிட்டது. சுமார் 70,000 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டி உள்ளது. இது குறித்து விரிவாக வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படும். எந்தெந்த துறைகளில் இருந்து எவ்வளவு தரவேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படுவது அல்ல.நிதி ஆதாரங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும் உதாரணமாக 80,000 கோடி என்பது நிதிநிலையில் ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி துறை கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கும் சேர்த்து செய்யப்படும் செலவினம் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மூலதன செலவு ஒரு லட்சம் கோடி கூட செலவிடவில்லை அதாவது வருடத்திற்கு இருபத்தி ஐந்தாயிரம் கோடி கூட செலவிடவில்லை. நல்லாட்சியின் அடையாளம் என்பது உற்பத்தியில் 3 சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் .ஆனால் கடந்த வருடம் உற்பத்தியில் 1.5 சதவீதம் கூட செய்யவில்லை. அதனால் கூடுதலாக 30 ஆயிரம் கோடி முதல் 40,000 கோடி வரை மூலதன செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதுவரைக்கும் செய்ததைவிட இரண்டு மடங்கு செய்ய வேண்டும் கூடுதல் சாலை, விவசாயம், குடிநீர் துறைமுகங்கள் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் செய்திட வேண்டும். இதனை செய்தால்தான் வளர்ச்சியில் தெளிவான பாதையில்  செல்ல முடியும். முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார் இந்தியாவிலேயே ஏன் தென் கிழக்கு ஆசியாவிலேயே மூலதனம் செய்யக் கூடிய இடமாக தமிழ்நாடு திகழவேண்டும். உலக அளவில் மனித வளம் மிகுந்த மாநிலமாக இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றும் வகையில் அந்த அளவில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் என்பது இலக்கு. இதற்காக பல அடிப்படைத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் அத்தகைய திருத்தங்களை கொண்டு வர தயாராக இருக்கிறோம் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். உலகத்திலேயே சிறந்த பொருளாதார நிபுணர்கள் வைத்து அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் இதனை முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதற்கெல்லாம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் மிகவும் முக்கியமானவை மூலதன செலவை இரண்டு மடங்கு ஆக்கிட வேண்டும் அதற்கு நிதி எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வரக்கூடிய வருமானத்திற்கு சரியான முறையில் சரியான நேரத்தில் செயல்களுடன் அவை செலவிடப்பட வேண்டும் .அந்த அடிப்படையில் துறையின் அமைச்சர்  மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எங்கள் கட்சியில் இயக்கத்தின் சரியான செயல் வீரராக இருக்கக் கூடியவர் சரியான விஷயங்களை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பவர். அவரின் சீரிய மேலாண்மையில் இந்தத் துறை இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நிதி துறையின் சார்பில் செய்ய வேண்டியவைகளை செய்வோம் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!