மேலூரில் காங்கிரஸ் கட்சி சைக்கிள் பேரணியில் கைகலப்பு, வழக்கறிஞருக்கு காயம்.,,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை பிரிவு சார்பாக, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை என 900 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பேரணி, அப்பிரிவின் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்று வருகின்றது,இந்நிலையில் மேலூர் பகுதிக்கு வந்த இந்த சைக்கிள் பேரணிக்கு, மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் இரவிச்சந்திரன் தலைமையில் செக்கடி பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்து பேசிக்கொண்டிருந்தனர், அப்போது காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான வழக்கறிஞர் துரைப்பாண்டி வரவேற்று பேச மைக்கை வாங்கியப் போது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது, இதில் வழக்கறிஞர் துரைப்பாண்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த காங்கிரஸ் கடீசி நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கறிஞர் துரைப்பாண்டி கூறும்போது.கட்சியில் இருந்துக்கொண்டே சிலர் கட்சிக்கும் அதன் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர், அவர்களின் தூண்டுதல் காரணமாக மலம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி, நிர்வாகிகள் முன்னிலையில் என்னை தாக்கியுள்ளார் இதுகுறித்து கட்சியினருடன் பேசி புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரின் சைக்கிள் பேரணி வரவேற்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்