இராஜபாளையத்தில் வீடு வாடகைக்கு பார்ப்பதுபோல் சென்று மூதாட்டியிடம் செயினை பறிக்க முயன்ற பெண் கைது .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தர்மாபுரம் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள் வயது 61 தனியாக வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு வாடகைக்கு வீடு பார்ப்பது போல் சென்ற பச்சமடம் தெருவைச் சேர்ந்த சண்முகத்தாய் வயது 37 கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் சண்முகத்தாய் வாடகை வீடு பார்ப்பது போல் சென்று அண்ணம்மாளை தாக்கி 5 பவுன் தங்க செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார் அப்போது அன்னம்மாள் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்முகத்தை பிடித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதையடுத்து இராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் ஆய்வாளர் முத்துக்குமரன் , சார்பு ஆய்வாளர் ராமேஷ் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தாயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்..

.செய்தியாளர் வி காளமேகம்