Home செய்திகள் இ-சேவை மையங்களில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் பேட்டி.

இ-சேவை மையங்களில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் பேட்டி.

by mohan

மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:நிர்வாக வசதிக்காக வருவாய் வட்டங்கள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு:நிர்வாக வசதிக்காக எப்படி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதோ அதைப்போல பெரிய வட்டங்களையும் பிடித்தால்தான் நிர்வாக வசதி சரியாக இருக்கும் என்கிற எண்ணம் அரசுக்கு இருக்கிறது. இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவரது ஆணைக்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இ சேவை மையங்களில் நடைபெறும் ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு:அனைத்து இ-சேவை மையங்களிலும் தவறுகள் நடப்பது இல்லை ஒரு சில இ-சேவை மையங்களில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அவர்களுடைய அனுமதி ரத்து செய்யப்பட்டு மேலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி குறித்த கேள்விக்கு:விமான நிலைய விரிவாக்கப் பணி ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. அதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்த விறுகிறோம். அதில் 460 ஏக்கர் பட்டா நிலங்களும் 161 ஏக்கர் புறம்போக்கு நிலங்களும் உள்ளது. அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து 200 கோடி ரூபாய் பணம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் அரசுத் துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. அதற்குரிய துறைகளில் அனுமதி பெற்று முதலமைச்சரின் அனுமதியுடன் விரைவில் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி தொடங்கப்படும்.ஒப்படைக்கும் நில உரிமையாளர்களுக்குகான நிவாரணம் குறித்த கேள்விக்கு:அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு அதை அவர்களுக்குக் கொடுத்து விட்டோம் இதற்கு முன்பாக இருந்த அதிகாரிகள் எப்படி பேசி முடித்தார்களோ அந்த அடிப்படையிலேயே முடிவு வரும். நாங்கள் புதிதாக எதுவும் குழப்ப விரும்பவில்லை. எங்களைப் பொறுத்த அளவில் விரிவாக்கப் பணிகள் விரைவில் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது அதனால் முதலமைச்சரின் அனுமதி பெற்று இந்த பணிகள் துவங்குவதற்கான வேலைகளை செய்வோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com