Home செய்திகள் பாதிக்கப்படும் தூய்மைப் பணியாளர்களின் நிலையை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் கோரிக்கை.

பாதிக்கப்படும் தூய்மைப் பணியாளர்களின் நிலையை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் கோரிக்கை.

by mohan

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் என்கின்ற தூய்மைப் பணியாளர் பணியில் இருக்கும் போது கரண்ட் ஷாக் அடித்து மருத்துவமனையில் கையை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை மதுரை மாநகராட்சி சார்பாகவோ அல்லது ஒப்பந்தக்காரர் சார்பாகவோ அவரை சென்று பார்க்கவில்லை. அவருக்கான இழப்பீடு இதுவரைக்கும் வழங்கவில்லை. எங்க தேசிய தில்லி பணியாளர் ஆணையத்தின் சார்பாக கார்ப்பரேஷன் கமிஷனருக்கு கடிதம் கூட அனுப்பியிருந்தோம். அவருக்கு உடனடியாக மருத்துவத்திற்கான செலவை அவசியம் ஏற்கவேண்டும் aள்து சொல்லி இருந்தோம். ஆனால் இதுவரைக்கும் எந்த பதிலும் இல்லை. அதனால் நானே நேரடியாக சென்று அவரை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் நல்லது செய்யும் விதமாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து அந்த ஒப்பந்த முறையில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தமிழக அரசாங்கம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும்.நீட் உச்சநீதிமன்றம் கொண்டு வந்து அதை எதிர்த்து அதற்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழக அரசுக்கு பாதிக்கப்படுகிறது என்ற ஒரு பொய்யான காரணத்தை சொல்லி ஒரு குழு அமைத்தவர்கள். எங்களுடைய கோரிக்கைகள் லட்சக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இந்த பாதிப்புகளை ஆராய்வதற்கு ஏன் தமிழக அரசாங்கம் ஒரு குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கக் கூடாது. அதனால் இந்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை கண்டிப்பாக அமைக்க வேண்டும் என்பது என்னுடைய முக்கிய கோரிக்கை.இரண்டாவது கோரிக்கை இந்த ஸ்டாலின் போல இன்னும் ரெண்டு பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இது அவர்களை பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கும் மதுரை மாநகராட்சி இதே மாநகராட்சியில் அரசு ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட நிலைமை வந்து இருந்தால் உடனடியாக ஏதாவது இழப்பீடு கொடுத்திருப்பார்கள் கவனிக்கப்படாத அந்த அரசு அதிகாரிகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற என்னுடைய கோரிக்கையை ஏற்க வேண்டும் அல்லது இப்போது கவனிக்காமல் இருக்கின்ற அந்த மதுரை கமிஷனர் மீது துறை ரீதியான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயந்திரங்கள் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றுவது குறித்த கேள்விக்கு:மனித கழிவுகளை அகற்றுவதற்கு ஏற்கனவே தடை செய்து 2013 சட்டம் இருக்கிறது. அதை கடுமையாக கடைபிடிக்க சொல்லி இந்தியா முழுவதும் கடிதம் எழுதி வலியுறுத்தி கொண்டிருக்கிறோம். அது இல்லாமல் மாநகராட்சி இதை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட துறையில் ஆய்வுசெய்து அந்த மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மிஷன் நிறைய இருக்கிறது. இரண்டு மாதங்களில் குஜராத்தில் ஒரு புதிய இயந்திரம் கண்டுபிடித்து அது வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒருசில மாநகராட்சிகளில் இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது என்பது தெரியவில்லை. சில மாநகராட்சிகள் இடம் நிதி இல்லை என்று பொய்யான காரணத்தைக் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்களுக்கு மனம் தான் இல்லை ஏனென்றால் மாநகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியர் நினைத்தாள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒருசில மத்திய-மாநில நிறுவனங்களிடம் சிஎஸ்ஆர் நிதி பெற்று இந்த மாதிரி இயந்திரம் வாங்கி தர முடியும். பல மாநிலங்களில் இது போல வெற்றிகரமாக செய்துள்ளார்கள் அது போல் இங்கேயும் செய்ய வேண்டாம். ஆனால் பலமுறை வலியுறுத்தியும் இதைச் செய்யாமலிருப்பது தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.ஒப்பந்த பணியாளர்களின் பணி நிரந்தரம் குறித்த கேள்விக்கு:இது குறித்து நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தோம் ஆனால் அதற்கு அவர்கள் கூறுவது மாநகராட்சி தவிர ஊராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்துகளில் நிதி இல்லை என்கிறார்கள். அதற்கு நாங்கள் கேட்பது: இன்று வரை காண்ட்ராக்ட் முறையில் தான் செயல்படுகிறது. அந்த காண்ட்ராக்ட் காரர்கள் லாபத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்து வரும் லாபத்தை இவர்களுக்கு ஊதியமாக கொடுக்க வேண்டும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!