மதுரையில் மிகவும் பிற்பட்டோர்,ஒடுக்கப்பட்டசமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் 10.5% வன்னியர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அறிஞர் குழு மூலம் ஆய்வு செய்து எல்லா சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு இடத்திலும் கிடைத்திடும் வகையில் வகுப்புவாரித் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை வகுத்துச் செயல்படும்வரை முறை எம்.பி.சி. 20% இட ஒதுக்கீட்டைச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய கூடாது என்று அரசை வலியுறுத்துவது என்றும் , பொது வெளியில் நடைபெறும் பொய் பிரசாரங்களை முறியடித்து, அனைத்து மக்களுக்குமான சமூக நீதியை காக்க பாடுபடுவது என்றும், 10.5% அநீதியானது என்பதை விளக்க விரைவில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும், ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.