Home செய்திகள் வைகையில் கழிவு நீர் கலப்பது விரைவில் நிறுத்தப்படும்:மதுரை மாநகராட்சி ஆணையாளர் தகவல்:

வைகையில் கழிவு நீர் கலப்பது விரைவில் நிறுத்தப்படும்:மதுரை மாநகராட்சி ஆணையாளர் தகவல்:

by mohan

மதுரை நகரில் வைகை நதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பது, விரைவில் நிறுத்தப்படும் என, மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:மதுரை மாநகராட்சி வைகை வடகரை பகுதி, செல்லூர் பகுதி, குலமங்கலம் பகுதி, பந்தல்குடி கால்வாய், மதிச்சியம் பகுதி, தென்கரை பகுதி, பேச்சியம்மன் படித்துறை பகுதி, இஸ்மாயில் புரம் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது, வைகை நதியில் நீருடன் கலக்கிறது. இது மட்டுமில்லாமல், வைகை நதியின் மேல்புறம் கலக்கும் கழிவு நீரும், வைகை நதியின் நகர் பகுதியை கடந்து செல்கிறது.மதுரை நகரில், வைகை வடகரை பகுதியில், பாதாள சாக்கடை அமைக்கும் பணியும், தென்கரை பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பணி நடந்து வருவதால், பணி முடிவுற்றதும் பாதாள சாக்கடைகள் இணைக்கப்பட்டு, வைகை நதியில் கழிவுநீர் கலப்பது உடனடியாக நிறுத்தப்படும்.மேலும், பந்தல்குடி கால்வாயில் வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, வைகையில் விடப்படுகிறது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com