Home செய்திகள் பல வாரங்கள் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு.

பல வாரங்கள் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு.

by mohan

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு இ. இ. ரோடு பாலரங்காபுரம் இரண்டாவது தெரு சந்திக்கும் இடத்தில். ( பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை அருகே) பல வாரங்களாக பாதாள சாக்கடை நீர் வெளியே கசிந்து சாலை முழுவதும் செல்கிறது அதனால் துர்நாற்றமும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர் ஓகே சிவா கூறுகையில்…. மாநகராட்சி அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை அலட்சியப் போக்குடன் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார் அதில் பாதாள சாக்கடை ஈக்கள் மற்றும் கொசுக்கள் உணவு பண்டங்களிலும் மனிதர்கள் மேலும் அமர்வதால் நோய்த் தொற்று அபாயத்தில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்… உடனடியாக மாநகராட்சி அடைப்பை சரி செய்து அப்பகுதி மக்கள் நோய்த் தொற்றில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் வைக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com