
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்து 3 நாட்களாக இரவு நேரங்களில் இடி, மின்னல், பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இதனால், பழுதடைந்த மின்கம்பங்கள், பழமையான டிரான்ஸ்பார்மர்கள் கோளாறு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கன மழையில் அலங்காநல்லூர், கல்லணை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் பழுதடைந்து இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.இதனால், அப்பகுதி பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதலே அலங்காநல்லூர் பகுதி மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்ம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் துரித நடவடிக்கையால் தடைபட்ட மின்சாரம் உடனடியாக சரியானது.நள்ளிரவு முதல் இப்பகுதியில் மின்சார தடை ஏற்பட்ட நிலையில் சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மின்சார ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.