
மதுரை மாவட்டம் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வரிச்சியூர் கிராமம்.இக்கிராமத்தில் சாலையில்பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள தேனீர் கடையில்வாடிக்கையாளர்கள் பலர் தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர்.அந்நேரத்தில் சிவகங்கை சாலையில் இருந்து மதுரை நோக்கி தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செங்கல் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தேநீர் கடைக்குள் புகுந்தது.அதிர்ஷ்டவசமாக ஆட்கள் யாருக்கும் சேதம் ஏதும் ஏற்படவில்லை.சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.இதுகுறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.