வில்லிசை கலைஞர்களுக்கு நிவாரணம்:

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில், வசிக்கும் வில்லிசை கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.கொரோனா காலத்தில் நலிவுற்ற கலைஞர்களுக்கு சமூக சேவகரும், மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த மதுரை அண்ணாநகர் முத்துராமன் தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.அந்த அடிப்படையில், பாளையங்கோட்டையில் வசிக்கும் நலிவுற்ற வில்லிசை கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகளை முத்துராமன் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மைய நிர்வாகிகளான குணா அலி, நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்