
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ளது கள்ளந்திரி.இங்கு பெரியாறு வைகை பிரதான கால்வாய் செல்கிறது.தற்போது மதுரை திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் ஒருபோக பாசனத்திற்காக தண்ணிர் சென்றுகொண்டிருக்கிறது.சாதாரண மற்றும் விடுமுறை நாட்களில் தண்ணீர் செல்லும்பொழுது கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் இளைஞர்கள் மகிழ்ச்சியாக குளித்துவிட்டு செல்வது வழக்கம்.ஆனால் தற்பொழுது இந்த கொரானா ஊரடங்கு காலத்திற்கு சுற்றுலா சார்ந்த பொழுதுபோக்கு இடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் கள்ளந்திரி பெரியாறு பிரதான கால்வாயில் சமூக இடைவெளியின்றி குளித்துவிட்டு சென்றனர்.கடந்தாண்டு இதேபோல் கள்ளந்திரிகால்வாயில் குளிக்க சென்ற சிலர் நீரில் மூழ்கி பலியாகிய சம்பவத்தை தொடர்ந்து கால்வாய் அருகே எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அதனையும் மீறி மக்கள் குளித்து வருவது கொரானா பரவல் சூழ்நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் உயிரிழப்பு ஏற்படும் முன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.