
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் சுற்றி மழை நீர் வடிகால் சிமெண்ட் முடிகள் பொருத்தப்பட்டுள்ளது இதில் மேற்புறம் இரும்பு கம்பியால் ஆன யூ வடிவில் பொருத்தப்பட்டுள்ளது இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த யூ வடிவில் கம்பியில் தடுக்கி விழுந்து காயம் அடைகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதேபோன்று பொதுமக்களும் தெப்பக்குளத்தில் தண்ணீரில் குப்பைகளை கவரில் கொண்டு வந்து வீசி செல்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது குப்பைகள் மேலே மிதந்து அதில் பறவைகள் கழிவு குப்பைகளை உன்று உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனை களைய மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது மேலும் பொதுமக்களும் தெப்பக் குளத்தில் உள்ள குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக யூ வடிவில் கம்பியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.