மதுரை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 927 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 9201 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மதுரையின் பிரதான தடுப்பூசி மையமாக செயல்படும் அரசு மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான டோக்கன் பெறுவதற்காக அதிகாலை 4 மணி முதல் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி இல்லை என அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோரிப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோது முன் அறிவிப்பு இல்லாததால் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்று காதிருந்தவர்களுக்கு நாளை முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான டோக்கன் வழங்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான டோக்கன் வழங்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.இன்று தடுப்பூசி 4410 கையிருப்பில் உள்ள நிலையில் 15 மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.