Home செய்திகள் பெருங்குடி முத்தையா கோவிலில் வளர்ந்த “அர்த்தநாரீஸ்வரர்” கோவில் மாடு இறப்பு., கிராம மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்று நல்லடக்கம்.

பெருங்குடி முத்தையா கோவிலில் வளர்ந்த “அர்த்தநாரீஸ்வரர்” கோவில் மாடு இறப்பு., கிராம மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்று நல்லடக்கம்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவில் அமைந்துள்ள பெருங்குடி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 4000 பேர் வசித்து வருகின்றனர். பெருங்குடி கிராமத்திலுள்ள பழமைவாய்ந்த பிரசித்து பெற்ற முத்தையா கோவிலிற்க்கு12 வருடத்திற்கு முன்னால் மாடு ஒன்றினை நேர்ந்து விட்டுள்ளனர். கோவில் மாட்டினை கிராம மக்கள் அனைவரும் உணவளித்து செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.முத்தையா கோவில் மாடு என்பதனால் இம்மாட்டினை “முத்தையா மாடு” என்றே கிராமமக்கள் அழைத்து வந்தனர். மேலும்., நாள்போக்கில் இம்மாடு “இருபடைப்பு” மாடாக வலம் வந்தது தனிச்சிறப்பு. காளை மாட்டின் கொம்பு மற்றும் உறுப்பு உடையதாகவும், பசு மாட்டினை போன்று பால் தரக்கூடியாதாகவும் இரு தனிவேறு சிறப்பு பெற்றதனால் இம்மாட்டினை”நந்தி மாடு” என்று கிராம மக்களால் அழைக்கப் பட்டது.இந்நிலையில்., கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த முத்தையா கோவில் மாடானது நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென உயிரிழந்தது. தொடர்ந்து., இறந்த கோவில் மாட்டிற்கு ஊர்மக்கள் அனைவரும் மாலை அணிவித்தும்., வேஷ்டி, துண்டு ஆகியவை போர்த்தியும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர்.,மாட்டிற்கு பூஜை செய்து இறுதி மரியாதை செய்த பின்னர் கிராம பெண்கள் “குலவை” முழக்க செய்து ஊர்வலமாக கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.12 வருடமாக தாங்கள் வளர்த்த கோவில் மாட்டிற்காக ஊர்மக்கள் அனைவரும் இணைந்து இறுதி மரியாதை செலுத்திய காட்சி அங்கிருப்பவர்களை நெகிழ்வைடைய செய்தது.இதுக்குறித்து., அக்கோவில் பூசாரி கூறியதாவதுஇங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான கோவிலாக இந்த முத்தையா கோவில் இருப்பதாகவும்., கடந்த 12 வருடங்களாக இந்த மாட்டினை தங்கள் செல்லப்பிள்ளையாக வளர்த்து வந்ததாக கூறினார். தொடர்ந்து., கடந்த சில தினங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்த மாட்டிற்கு அனைத்து சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com