Home செய்திகள் மதுரையில் கொரானா கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பினர் 50வது நாளான இன்று அரசு மருத்துவமனையில் வழங்கல்.

மதுரையில் கொரானா கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பினர் 50வது நாளான இன்று அரசு மருத்துவமனையில் வழங்கல்.

by mohan

தமிழ்நாட்டில் கொரானா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவிய நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.இதன் காரணமாக மதுரை மாநகரில் ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆதரவற்றோர்கள், முதியோர்கள், உணவின்றி தவிப்போர்க்கு மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உணவு பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கி வருகின்றார்.ரோட்டோரத்தில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடின்றி தவிப்பவர்களுக்கும்மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கும்தினமும் 500 பேருக்கும் மேலாக உணவு பொட்டலங்களை வழங்கி வரும் நிலையில் தொடர்ந்து இன்று 50 வது நாள் மதிய உணவு பொட்டலத்தை ஆடிட்டர் சேது மாதவா, மங்கையர்க்கரசி மில்ஸ் சேர்மன் கண்ணப்ப செட்டியார், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்னவேல், அட்சய பாத்திரம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிக்கு உதவியாக இருப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.கடந்த மாதம் இந்த சேவையினை ஆரம்பித்து தொடர்ந்து 50வது நாளாக உணவு பொட்டலங்களை வழங்கி வரும் தன்னார்வலரின் இச்செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com