Home செய்திகள் தியாகி விஸ்வநாத தாஸ் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

தியாகி விஸ்வநாத தாஸ் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தவர் தியாகி விஸ்வநாததாஸ். மருத்துவர் சமூகத்தில் பிறந்திருந்தாலும் வெள்ளையர் ஆட்சி காலத்தில் நாடகங்களின் மூலம் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை பொதுமக்களுக்கு ஊட்டி வந்தவர் இவர். தியாகி விஸ்வநாததாஸ் வெள்ளையர்களை அவர்களது ஆட்சிக் காலத்திலேயே கொக்கு பறக்குது, வெள்ளைக் கொக்கு பறக்குது, என்ற பாடலின் மூலம் பரங்கியரை விரட்டுவதற்காக பாடல்களை பாடி பொதுமக்களுக்கு சுதந்திர வேட்கையை வளர்த்து வந்தார்.இதனால் இவர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களால் பலமுறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். மேலும் பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையிலும், திடீரென மாறு வேடங்களில் வந்து நாடகங்களில் நடித்தும் சுதந்திர வேட்கையை ஊட்டி வந்தார். இதனால் இவர் ஆங்கிலேயர்களால் பல முறை சித்ரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், இன்று அவரது 135-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் நவீன் பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், உட்பட அதிகாரிகளும் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com