Home செய்திகள் மதுரையில் அடாவடி வசூலில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் – அபராதம் கட்டினால் கடைகளில் கூட்டத்தை சேர்த்து கொள்ளலாமா. பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரையில் அடாவடி வசூலில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் – அபராதம் கட்டினால் கடைகளில் கூட்டத்தை சேர்த்து கொள்ளலாமா. பொதுமக்கள் குற்றச்சாட்டு

by mohan

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களுக்கு ஊராடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்து கடைபிடிக்கப்பட்டு வருகிற நிலையில், கைபேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதனால் மதுரையில் உள்ள மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் இயங்கி வரும் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நாள்தோறும் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.இந்தநிலையில் அங்குள்ள ஒரு கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வில்லை என கூறி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்க முயற்சி செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் பாலமுருகன் என்பவர் கூட்டம் அதிகமாக உள்ள மற்ற கடைகளை விடுத்து தனது கடைக்கு மட்டும் அபராதம் விதிப்பது குறித்து கேள்வி எழுப்பியது மட்டுமின்றி இதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர்.

குறிப்பாக மற்ற பெரிய கடைகளில் கூட்டம் மிகுந்து காணப்படுவதை கண்டுகொள்ளாமல் சிறிய கடைக்கு மட்டும் அபராதம் விதிப்பது நியாயமே இல்லை என்றும், நாள் ஒன்றுக்கு 5 கடைகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க உயர் அதிகாரிகள் உதரவிட்டுள்ளதால் அபராதம் விதித்துள்ளதாகவும், ரசீதும் வழங்குவதில்லை எனவும் குறிப்பிடுகின்றனர். மேலும் அபராதம் கட்டவில்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கின்றனர் எனவும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.அபராதம் கட்டினால் கூட்டமாக நிற்கவைத்து வியாபாரம் செய்து கொள்ளலாமா என்று குற்றம் சாட்டுகின்றனர்.தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை காரணமாக அமல் படுத்தப்பட்ட ஊராடங்கால் சிறு வியாபாரிகள் தங்களது கடனை திருப்பி செலுத்த ஓயாமல் உழைக்க முயற்சிக்கும் போது மாநகராட்சி அதிகாரிகளின் பாரபட்சமான நடைமுறை பலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகின்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com