Home செய்திகள் சோழவந்தான் , அலங்காநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்:

சோழவந்தான் , அலங்காநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்:

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை பன்மடங்கு விலை உயர்வால் ஏற்றுமதி இறக்குமதியில் வாகன கட்டணம் அதிகரிக்கின்றது இதனால் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து உணவு பொருட்களை வாங்க முடியாது தினமும் கஷ்டப்படுகின்ற அவல நிலை ஏற்படுகின்றது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மோடி அரசின் திறமையற்ற அரசின் எதேச்சதிகார போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். சோழவந்தான் பெட்ரோல் நிலைய வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, எஸ்சி துறை மாநில துணைத் தலைவர் மூர்த்தி துவக்கி வைத்தார்.மதுரை வடக்கு மாவட்ட எஸ்.சி. துறை தலைவர் சங்கரபாண்டி , வடக்கு மாவட்டச் செயலாளர் பிரசன்னா, சிறுபான்மை பிரிவு தென் மண்டல தலைவர் பாதுஷா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தீபக் ஆனந்த், செல்வம் மதுரை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பவுன்ராஜ், விராலிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் முத்து முன்னிலை வகித்தனர்.இளவரசன் எஸ்சி துறை மாவட்ட துணைத் தலைவர் , ராஜா செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் முகமது ராஜா , பிரேம்நாத் , கிருஷ்ணமூர்த்தி, ராஜா உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் சோழவந்தான், காங்கிரஸ் எஸ் சி துறை நகர தலைவர் கனகராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட அனைவருக்கும் அவசர குடிநீர் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து சானிடைசர் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு , தெற்கு வட்டாரத் தலைவர் சுப்பாராயலு தலைமை தாங்கினார். வடக்கு வட்டார த் தலைவர் காந்தி, மாவட்ட மனித உரிமைகள் துறை தலைவர் ஜெயமணி, முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக் கனி, ஒன்றிய துணைத் தலைவர் மலைராஜன், மனித உரிமை வட்டாரத் தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் , ஒவ்வொரு நாளும் விளையாடிக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியும், சுமார் 30- க்கும் மேற்பட்ட காங்கிரசார் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com