Home செய்திகள் உதயநிதிக்கு பாடல் தயார் செய்து திருப்பரங்குன்றம் கோயில் முன்பு யூடியூப் சேனலில் வெளியிட்ட வளரும் உதவி இயக்குனர்.

உதயநிதிக்கு பாடல் தயார் செய்து திருப்பரங்குன்றம் கோயில் முன்பு யூடியூப் சேனலில் வெளியிட்ட வளரும் உதவி இயக்குனர்.

by mohan

மதுரை ஆரப்பாளையம் பகுதியைத் சேர்ந்த கனிராஜ் (26), சென்னையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இன்றைய காலத்து இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் உதயநிதி அரசியல் வருகை மற்றும் அவரது செயல்பாடுகளை பாராட்டும் விதமாக, உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கனிராஜ்மற்றும் அவரது சினிமா நண்பர்கள் அவருக்காக பாடல் ஒன்றை உருவாக்கி அதனை நேற்று மாலை 6.00 மணி அளவில் அவருடைய யூடியூப் (YouTube) பக்கத்தில் “உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என்ற தலைப்பில் பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.முன்னதாக இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்கள் மூலம் அனைவராலும் சமுக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வந்ததை அடுத்து, தொடர்ந்து அந்தப் பாடல் அனைவரது கவனத்தையும் கவரத்தொடங்கியது. மேலும் பாடலை வெளியிடும் முன்பு கனிராஜா நேரடியாக சென்னைக்கு சென்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இந்த பர்ஸ்ட் லுக்கை காட்டியுள்ளார்.

 மாலை அவருக்காக உருவாக்கப்பட்ட பாடல் மாலை 6.00 மணிக்கு யூடியூப் சேனலில் வெளியானதை தொடர்ந்து அந்த பாடலை சினிமா பிரபலங்கள் சிலர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். குறிப்பாக பிரேம்ஜி அவருடைய ட்விட்டர் பக்கதில் உதயநிதி அண்ணா இதை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என குறிப்பிட்டு பதிவிட்டார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கும் விதமாக ரீடுவிட் செய்துள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்கள் இந்த பாடலை ஷேர் செய்வதால் தற்போது இந்தப் பாடலானது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.இந்த பாடலை மீண்டும் நண்பர்கள் முன்னிலையில் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு கனிராஜ் வெளியிட்டனர். இந்தப்பாடலை இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், அதிகளவில் மக்களை கவர வேண்டும் என மீண்டும் வெளியிட்டதா அவர்.. தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!