Home செய்திகள் ஒருபுறம் ஒரு குடம் தண்ணீருக்காக மேயர் மற்றும் ஆணையாளரை முற்றுகையிடும் பொதுமக்கள் மறுபுறம் பல லட்சக்கணக்கான லிட்டர் வீணாகும் தண்ணீர்.

ஒருபுறம் ஒரு குடம் தண்ணீருக்காக மேயர் மற்றும் ஆணையாளரை முற்றுகையிடும் பொதுமக்கள் மறுபுறம் பல லட்சக்கணக்கான லிட்டர் வீணாகும் தண்ணீர்.

by mohan

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன இதில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு பகுதிக்குப் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இதில் சில இடங்களுக்கு குடிநீர் லாரிகளில் கொண்டு சென்று கொடுக்கின்றனர் குழாய் மூலம் வழங்கப்படும் பல பகுதிகளில் சில நேரங்களில் பல நாட்களாக தண்ணீர் வருவதில்லை எனவும் அப்படி வந்தால் குடிநீர் கலங்கலாகவும் துர்நாற்றம் வீசி வருகின்றது என குற்றச்சாட்டும் இருக்கிறது மேலும் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாகியும் அதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுகின்றன குறிப்பாக மதுரை பைபாஸ் சாலை ஆர்டிஓ அலுவலகம் நுகர்பொருள் வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு அருகே சுமார் மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு அடைகின்றனர் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீருக்கு அலையாய் அலைகின்ற பொதுமக்கள் ஒருபுறம் மறுபுறம் பல லட்சக்கணக்கான லிட்டரை வீணாக்கும் அதிகாரிகள்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறைப்படி ஆய்வுகள் மேற்கொண்டு இருக்கிறார்களா ஏன் இவர்களுக்கு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது என தெரியவில்லையா ஏன் அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா அலட்சியப்போக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது கோடை காலம் நெருங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்படும் ஐயமும் உள்ளது அடுத்த 20 ஆண்டுக்குள் அதிக அளவு தண்ணீர் பஞ்சம் மதுரை மாவட்டத்தில் மட்டுமே ஏற்படும் என ஆராய்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் இதனை கருத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வீணாக சாலையில் செல்லும் குடிநீர் குழாய்களை உடைப்புகளை சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கக் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா மேயர் மற்றும் ஆணையாளர் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com