Home செய்திகள் மதுரை மாவட்டத்திலுள்ள  420 கிராம பஞ்சாயத்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் உயிரை பாதுகாக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டத்திலுள்ள  420 கிராம பஞ்சாயத்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் உயிரை பாதுகாக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

by mohan

திருமங்கலம்  தொகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு உள்ள மக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளரகளிடம் கூறியதாவது கொரோனா தொற்று பாதிப்பு  முதலிடங்களில் சென்னை ,கோவை, செங்கல்பட்டு இருந்து வருகிறது அதனைத் தொடர்ந்து மதுரை 4ஆம் இடத்தில் உள்ளது மதுரையில் இதுவரை 57,182 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் நாளுக்கு நாள் பாதிப்பு காரணமாக மதுரை மாவட்டம் சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களை பின் தள்ளி பாதிப்பில் முதல் இடத்திற்கு வந்து விடுமோ என்று அச்சம் மதுரை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.தளர்வு அறிவிக்கப்பட்டபோது  மாவட்ட மக்கள் அதிக அளவில்  காய்கறி கடைகளில் மளிகை கடைகளில் வீதிகளில் திரண்டனர் இதன் பாதிப்பு அடுத்த வாரம் தெரிய வரும் போது அந்த சவால்களை அரசு எதிர்கொள்ள வேண்டும் .நேற்று மட்டும் மதுரை மாவட்டத்தில்  1,453 நபர்கள் பாதிக்கப்பட்டு இதில் 16 பேர் பலியாகி உள்ளனர்.இதில் மதுரை மாநகராட்சி பகுதியில் 753 நர்களும், ஊரகப் பகுதிகளில் 700 நபர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர் .மதுரை மாவட்டத்தில் 13  ஊராட்சி ஒன்றியங்கள், 420 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன கிராமப்புறங்களில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும், துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும், மக்களுக்கு தேவையான மருந்து மாத்திரை வழங்க வேண்டும் கொரோனா  தடுப்பு குறித்து விழிப்புணர்வை கிராம மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்

மூடுவார்பட்டியைச் சேர்ந்த 31 வயது நிரம்பிய பரணிகுமார் என்பவர்கொரோனா தொற்றின்  காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ்காக கடைசிவரை காத்திருந்து ஆம்புலன்ஸ் கடைசியில் வராத காரணத்தால் சிறிய சரக்கு வாகனத்தில் மூலம் 30 கிலோமீட்டர் வரை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் மதுரை மக்களுக்கு மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .ஆனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அம்மாவின் அரசு  முதல் அலையின் போது தேவைக்கு ஏற்றவாறு புதிய ஆம்புலன்ஸை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் சிகிச்சைக்கு தேவையான ஆம்புலன்ஸ் வசதியை அனைத்து மாவட்டங்களுக்கும் செய்து கொடுத்தார் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு மக்களுடைய நம்பிக்கையை பெற்றதை தற்போது நினைவு கூறுகிறேன்.தற்போது ஆம்புலன்ஸ் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது அப்படி கிடைத்தாலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது அனுமதி கிடைத்தாலும் ஆக்ஸிஜன் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது இப்படி சிகிச்சைக்காக போராடி இன்னுயிரை இழக்கும் அபாய நிலையில் மதுரை மாவட்டம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது மதுரை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதுபோல் உயிர் இழப்பு ஏற்படாமல் மதுரை மக்களை பாதுகாத்திட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.ஒவ்வொரு உயிரும் நம் சமுதாயத்திற்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆனால் இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் சிகிச்சை பெற   வழி இல்லா நிலையில் மக்கள் தவிக்கின்றனர் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள் பழங்களை எடுத்துச் செல்லவும் சந்தைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். 31 தேதி வரை முழு ஊரடங்கு  நடவடிக்கை இருக்கும்பொழுது பொதுமக்களுக்கு தடை இல்லாத காய்கறிகள் பழங்கள் நியாயமான முறையில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!