Home செய்திகள் பொன்னமங்கலம் கிராமத்தில் கொரானா தொற்று நோயாளிகளை அழைத்து செல்ல அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால், தனியார் ஆம்புலன்ஸ் 50பேரை அழைத்து சென்றது.

பொன்னமங்கலம் கிராமத்தில் கொரானா தொற்று நோயாளிகளை அழைத்து செல்ல அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால், தனியார் ஆம்புலன்ஸ் 50பேரை அழைத்து சென்றது.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்களத்தில் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதி உள்ள 10க்கும் மேற்பட்டோர் கொரானா தொற்றால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத் துறையினர் உத்தரவின் பெயரில் அக்கிராமம் மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரானா பரிசோதனை மேற்கொண்டத்தில், 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவித்தனர். மேலும், கொரோனாவால் பாதிக்கபட்டோரை முகாமிற்கு அழைத்து செல்ல அரசு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து நீண்ட நேரமாகியும் அரசு ஆம்புலன்ஸ் வராததாலும், கொரானா தொற்று பாதிப்பு அந்த கிராமத்தில் அதிகமாக இருப்பதால் மற்ற ஆம்புலன்ஸ் நிர்வாகங்களும் யாரும் முன்வராத நிலையில், AS என்ற தன்னார்வல தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் இயங்கும் 2 ஆம்புலன்ஸ்கள் பொண்ணமங்கலம் கிராமத்திற்கு அந்நிறுவனம் அனுப்பிவைத்தனர். அந்த ஆம்புலன்சில் சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை பெயர்களை வாசித்து ஒரே வாகனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதித்தவர்களை அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பிறகு மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள காமராஜர் பழ்கலைகழக ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரானா கண்காணிப்பு மையத்திற்கு தொற்று பாதித்தவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் சிலர் கொரானா தொற்று பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்படுவதால் அந்த அச்சத்தின் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறாமல் ஓடி ஒளிந்து கொண்டனர், பிறகு அவர்களிடம் சுகாதாரத்துறையினர் பேசி வாகனத்தில் ஏற்றி கொரானா கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.கொரானாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்து செல்ல அரசு வாகனம் நீண்ட நேரமாகியும் வராததனால் அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்தனர். மேலும் 2 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்த சுகாதாரத்துறையினர் அந்த ஆம்புலன்ஸ் களில் 50 பேரை கொண்டு சென்ற வீடியோ அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் வீடியோவை செல்போனில் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட தால் தற்போது அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!