Home செய்திகள் எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் பணத்தை இழக்க வேண்டியதுதான்

எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் பணத்தை இழக்க வேண்டியதுதான்

by mohan

இன்றைய நவீன யுகத்தில் எல்லாமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி பலர் பல விதமான மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள் அதில் ஒன்று கூகுள் பே எனும் அழைக்கப்படும் பணம் மாற்றும் செயலி இந்த செயலியை பயன்படுத்தி சிலர் பணத்தை திருட்டுத்தனமாக எடுக்க முயற்சிக்கிறார்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய காலகட்டம் இது அப்படி ஒன்றுதான் மதுரையில் நடைபெற்றது. நூலிழையில் தப்பிய அவரது பணம் மதுரை பழங்காநத்தம் சேர்ந்த வினோத்குமார் இவர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் டயர் விற்பனை நிலையத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இந்த நிலையில், அவருக்கு கூகுள் பே இருந்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது நீங்கள் இதை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தகவல் வந்தது .அப்போது அவர் அருகில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபோது கூடு என்ன என்று பார்ப்போம் என்று பார்த்தபோது அது பணம் பறிக்கும் மோசடி கும்பலின் தகவல் என தெரியவந்தது..

உடனடியாக அதை அனைத்தும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டார் உள்ளே சென்ற போது அவரது வங்கி கணக்குக்கு அது நேரடியாக சென்றது அப்பொழுது பின் நம்பரை அவர் பயன்படுத்தி இருந்தால் அவர் எவ்வளவு தொகை குறிப்பிட்டிருந்தார் அவ்வளவு தொகையையும் அவர் இழக்க நேரிடும் எச்சரிக்கையாக சமூக ஆர்வலர்களும் கேட்டதால் அவருடைய பணமானது தப்பியது இதுபோன்ற மோசடி கும்பல் சமீபகாலமாக நவீன முறையில் பலரை ஏமாற்றி வருகிறது அதனால் மிகமிக எச்சரிக்கையாக பொது மக்களும் தொழிலாளர்களும் இருக்க வேண்டும் இதுபோன்று தேவையில்லாத பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காமல் இருப்பது நல்லது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!