Home செய்திகள் கொரோனா காரணமாக மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை.

கொரோனா காரணமாக மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை.

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் மன்னாடிமங்கலம் மேலக்கால் தாரா பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர் இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மல்லிகை பூ விலை கிலோ ரூபாய் ஆயிரத்திற்கு விற்க கூடிய சூழலில் குரானா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதால் மல்லிகைப்பூ விலை கிலோ ரூபாய் 50 ரூபாய்க்கு விற்பதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்இதனால் மல்லிகை பூ பறிக்க கூடிய கூலி கூட கிடைக்கவில்லை என்றும் அதனால் செடியிலேயே பூக்களை மலர விட்டு விடுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்மேலும் சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதால் மல்லிகைப் பூக்களும் அதிகமாக விளைச்சல் காணப்படும் கிலோ ரூபாய் ஆயிரத்திற்கு விற்கும் நிலையில் தொடர்ந்து 25 நாட்களுக்கு மல்லிகைப்பூ விலை நல்ல நிலையில் விளைச்சல் காணப்படும் ஆகையால் மல்லிகைப்பூ விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் இந்த ஆண்டு திருவிழா ரத்து காரணமாக விலை இல்லாததால் மல்லிகை பூ பறிக்க கூடிய கூலி கூட கொடுக்க முடியாமல் செடியிலேயே மலர விட்டுவிடுவதாக சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்மேலும் போதிய கூலி கிடைக்காததாலும் குரானா நோய் பயம் காரணமாகவும் பெரியவர்கள் வேலைக்கு வர மறுக்கிறார்கள் என்றும் ஆகையால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை வைத்து பூக்களை பறித்து சமாளிப்ப தாகவும் முடியாதபட்சத்தில் பறிக்காமல் விட்டு விடுவதாகவும் தெரிவிக்கின்றனர் நேரம் மாலை 6 மணி வரை மட்டுமே பூக்களை பறிக்கும் நேரம் அதற்கு பின்பு பூக்கள் மலர்ந்து விடுவதால் மறுநாள் பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டு வீணாகிவிடும் என்று தெரிவிக்கின்றனர்மல்லிகைப்பூ செடிகளுக்கு மருந்து அடிப்பதற்கு ஒரு மருந்து அடிக்க 2500 ரூபாய் செலவாகிறது சித்திரை மாதத்தில் மொத்தம் நான்கு மருந்து அடிக்க வேண்டும் இதற்கு ரூபாய் 10 ஆயிரம் செலவு ஆகிறது இந்த ஆண்டு மருந்து அடிக்கும் கூலி கூட எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறுகின்றனர்திருவிழா கூடினால் தான் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு வாழ்வாதாரம்ஆகையால் குரானா கட்டுப்பாடுகளை தளர்த்தி திருவிழா நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினால் எங்களைப்போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com