Home செய்திகள் சோழவந்தானில் ரயில்வே பெண் கேட் கீப்பரிடம் செயின்பறிப்பு.

சோழவந்தானில் ரயில்வே பெண் கேட் கீப்பரிடம் செயின்பறிப்பு.

by mohan

சோழவந்தான் அருகே வைகை ரயில்வே கேட் உள்ளது இது வடகரை கண்மாய்க்கு செல்லக்கூடிய முக்கிய பாதையாகும்இங்கு நேற்று காலை முதல் இரவு 8 மணி வரை தற்காலிக பணியாளராக சமய நல்லூரை சேர்ந்தசெல்வி 35 என்பவர் பணிபுரிந்து வந்தார் .நேற்று மதியம் சுமார் 2 30 மணி அளவில் முகவரி கேட்டு விசாரிப்பது போல் முன்பின் தெரியாத ஒரு நபர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்அப்போது அங்கு டூவீலரில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் பின் கையை பிடித்து கன்னத்தில் அறைந்து மிரட்டியுள்ளார் இது எதுவும் அறியாத செல்வி பதட்டத்துடன் இருந்துள்ளார்அப்போது டூவீலரில் வந்ததில் மற்றொருவர் செல்வி அணிந்திருந்த சுமார் 5 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலியை அறுத்து கொண்டோம் பின்பு கையிலிருந்த செல்போனை படித்துக் கொண்டும் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.பின்னர் செய்வதறியாது திகைத்த செல்வி அக்கம்பக்கத்தில் வந்தவர்களிடம் உதவிக்கு அழைத்து மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்இதன்பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் குருசாமி சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்இதன் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் 5 தனிப்படை அமைத்து கொடைரோடு டோல்கேட் முதல் மதுரை வரை போலீசார் சல்லடை போட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தது இப்பகுதியில் ஒரே பரபரப்பாக இருந்தது . ஊருக்கு வெளியே உள்ள ரயில்வே கேட்டில் பெண் ஒருவரை அதுவும் தனியாக ரயில்வே கேட்டை பாதுகாக்க எந்த வகையில் நிர்வாகம் பணியில் அமர்த்தியது என்பது கேள்விக்குறியாக உள்ளது .இங்கு சிசிடிவி கேமரா, மற்றும் பெண் பணியாளருக்கு உதவியாளரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com