Home செய்திகள் சாலையை முறையாக பராமரிக்காமல் செயல்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையின் வாகனமே விபத்துக்குள்ளானது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக ஆனது .

சாலையை முறையாக பராமரிக்காமல் செயல்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையின் வாகனமே விபத்துக்குள்ளானது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக ஆனது .

by mohan

மதுரை திருப்பரங்குன்றத்திலிருந்து விருதுநகர், கன்னியாகுமரி தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது இந்த சாலைகளில் நடுவே ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.இந்த நிலையில் இதைப்பற்றி போக்குவரத்துத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு சாலை சீரமைப்பது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்காமல் நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனப் போக்காக செயல்பட்டுவந்தர்.தற்போது தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து செல்லும் காரே இந்தசாலையில் விபத்துக்குள்ளானது.மதுரை ஏஞ்சல் நகரை சேர்ந்த தமிழக நெடுஞ்சாலைத் துறையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் உசேன் என்பவர் தனது உயர் அதிகாரியை அழைத்து சென்று விட்டு ஓட்டுனர் மட்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார்.அப்போது மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஹார்விபட்டி அடுத்துள்ள திருநகர் வழியில் வந்து கொண்டிருந்த போது சாலையின் இரு புறத்தில் வரும் வாகனங்கள் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அமைந்துள்ள சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்திற்கு சாலையின் குறுக்கே உள்ள தடுப்புச்சுவர் இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும், சமைக்கவும் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் சேர்ந்து அந்த காரை நகர்த்தி சாலைக்கு கொண்டுவர முயற்சித்தனர்.ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் காரின் அடிப்பகுதி அகற்ற முடியவில்லை, பின்னர் மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு காரை நகர்த்தி சாலையின் ஓரத்திற்கு கொண்டுவந்தனர்.திருப்பரங்குன்றத்தில் முக்கிய சாலையில் நடுவில் சிக்கிக் கொண்ட வாகனத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் இந்த விபத்திற்கு பிறகாவது சாலைகளை முறையாக பராமரித்து பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com