சின்ன உடைப்பு கிராமத்தில் ஆழ்துளை குழாய் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.இப்பள்ளிக்கு மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை குழாய் அமைக்க வேண்டும் என்ற தலைமையாசிரியரின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றும் வகையில் திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன்தொகுதி நிதியின் கீழ் ஆழ்துளை குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான பணியை துவக்கி வைக்கும் பணி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற திமுக உறுப்பினர் மருத்துவர் சரவணன் கலந்து கொண்டு பூஜை செய்து துவக்கி வைத்தார்.இதில் பள்ளி தலைமை ஆசிரியை ராணி கடல் கன்னிஉட்பட ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்