வில்லாபுரத்தில் வண்ணம் பூசிய வீட்டில் ஆறரை சவரன் களவாடிய வாலிபர் 1 மணி நேரத்தில் கைது:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் முத்தையாபிள்ளை தெருவை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேஷ் பாபு – காமேஸ்வரி, இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவர்களுக்கு சொந்தமான வீட்டில் குழந்தைகளுடன் வசித்துவந்தனர்.வெங்கடேஷ் பாபுவிற்கு வில்லாபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று உள்ளது. இந் நிலையில், வெங்கடேஷ் பாபுவின் கம்ப்யூட்டர் சென்டர் அருகில் உள்ள வீட்டை புதுப்பித்தனர்.அதில் வண்ணம் பெயிண்டிங் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(23) .என்ற இளைஞருடன் வெங்கடேஷ் பாபுவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வெங்கடேஷ் பாபுவும் – காமேஸ்வரி தம்பதியினர் 3 ஆண்டுகளாக வீட்டிற்கு வண்ணம் பூசாததால் தங்களது வீட்டிற்கும் வண்ணம் பூச நினைத்து பாலமுருகனை அணுகியுள்ளனர். பாலமுருகனும் ஒப்புக்கொண்டு வெங்கடேஷ் பாபுவும் – காமேஸ்வரி தம்பதியினர் வீட்டில் கடந்த 2 நாட்களாக வெள்ளை அடித்து வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்ட பாலமுருகன் வீட்டின் அறையிலிருந்து சாவியை கொண்டு பீரோவை திறந்து உள்ளே இருந்த தங்கநகைகளில் ஆறரை பவுன் நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவரது உள்ளாடையில் பதிக்கியுள்ளார். பின்பு வீட்டின் உரிமையாளர் காமேஸ்வரி வந்த போது அவரிடம் சாப்பிட செல்ல வேண்டும் 100 பணம் கொடுங்கள் என்று பாலமுருகன் கேட்டுள்ளார். பாலமுருகன் சாப்பிட பணம் கொடுப்பதற்காக காமேஸ்வரி பீரோவை திறப்பதற்கு சாவி தேடியுள்ளனர். சாவி வைத்த இடத்தில் காணாமல் போனதால் கணவனை அழைத்து பணத்தை கொடுத்துள்ளார்.பின்பு 100 வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பாலமுருகன் நகையை பத்திரமாக முட்புதரில் பத்துக்கிவைத்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார், இந்த நிலையில்,, பீரோவிற்கு கீழே வெள்ளி மோதிரம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காமேஸ்வரி உடனடியாக வீட்டின் அனைத்து இடங்களிலும் பீரோ சாவியை தேடியுள்ளனர். எங்கு தேடியும் சாவி கிடைக்காததால் இதுகுறித்து கணவன் வெங்கடேஷ் பாபுவிற்கு கூறியுள்ளார். வெங்கடேஷ் பாபுவும் காவல் உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவனியாபுரம் போலீசார் நடந்ததை பற்றி தம்பதியினரிடம் விசாரித்தனர். தம்பதியினர் கூறியதை வைத்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில்களை பாலமுருகன் கூறியதையடுத்து பாலமுருகனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து மறுத்து வந்த பாலமுருகன் போலீசார் அவர்களது பாணியில் கவனித்து விசாரிக்க தொடங்கியதும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.பின்பு , பாலமுருகன் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த தங்க நகையையும் மீட்டு வழக்குப் பதிவு செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். தங்க நகைகளை திருட நினைத்த திருடன் பாலமுருகன் வகையாக சிக்கி கைதானார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்