மாநில அரசுகளுக்கு எதிராக செஸ் வரியை மத்திய அரசு நியமித்துள்ள தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்படுகிறது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பின் அதிமுக சசிகலா தலைமையில் இயங்கும். மாநில அரசுகளுக்கு எதிராக செஸ் வரியை மத்திய அரசு நியமித்துள்ள தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்படுகிறது. கார்த்தி சிதம்பரம்சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கிறார்.கடந்த சில வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது குறித்த கேள்விக்கு:பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய எம்எல்ஏக்கள் குறித்த கேள்விக்கு அங்குள்ள எம்எல்ஏக்கள் ஏன் இளைஞர்கள் என்பது புரியவில்லை ஆனால்ஏன் கட்சியை விட்டு அவர்கள் விளங்கினார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் சிலர் பதவி ஆசைக்காக சென்றிருக்கலாம் கொள்கைப் பிடிப்போடு இருப்பவர்கள் என்னைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்கள் என்றால் .அவர்களால் பிஜேபி யில் சேர முடியாது அப்படி பிஜேபி சேர்ந்தார்கள் என்றால் அவர்கள் இவ்வளவு நாட்களாக கொள்கைப் பிடிப்பு இல்லாமல் இருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.பலருக்கு நிர்வாக ரீதியாக ஒரு கட்சியில் வருத்தம் இருக்கலாம் .ஆனால் அதிலிருந்து பிஜேபி செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பாண்டிசேரியில் அதிமுக ஆட்சி அமைக்கும் என ஜெயகுமார் கூறியது பற்றி:முதலில் அவர்கள் இங்கு ஆட்சி அமைக்கப்படும் அதன் பிறகு பார்க்கலாம்சசிகலா தீவிர அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு:சசிகலா அவர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தீவிர அரசியலில் தான் இருந்துள்ளார் ஜெயலலிதா இறந்த காலத்தில் கூட சசிகலா அவர்கள்தான் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் இருந்து எல்லாத்தையும் செய்து கொண்டிருந்தார் அதனால் அவர் தலைமையில் அதிமுக செயல்படுவது தான் நன்றாக இருக்கும்.நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கேள்விக்கு பின் சசிகலா அவர்கள் தலைமையில் மீண்டும் இணையும் என்பதில் சந்தேகமில்லை.ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளது:பெட்ரோல் டீசல் விலை குறித்த கேள்விக்கு செஞ்சுரியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது அனைவரும் பேட்டை தூக்கி காட்டலாம் என்ற நிலைமையில் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமானது இந்திய பொருளாதார சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. செஸ் வரி மத்திய அரசின் நேரடி வருவாய்க்கு கீழ் வருகிறது. இதனால் மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படும். செஸ் வரியை நீக்கினால் தான் நன்றாக இருக்கும் என்று கார்த்திக் சிதம்பரம் கூறினார்.டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் போராட்டத்தில் நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது:மோடியின் ஆணவம் தீரும்வரை இதற்கு முடிவே கிடையாது. விவசாயிகளின் மன வருத்தத்திற்கு காரணமே நரேந்திர மோடிதான்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்