சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி, கிணற்றில் விழுந்து தற்கொலை…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (29). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர், இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அனுப்பங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சிவகாசி தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கிணற்றில் மிதந்த உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது சங்கர் என்பது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப்பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வி காளமேகம்