திடீர் எரிவாயு கசிவு பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய தம்பதிகள். தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மதுரை எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார் நேற்று காலை சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து கணவனும் மனைவியும் வெளியே செல்ல முயன்றனர் அப்போது அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கதவில் ஆட்டோமேட்டிக் லாக் ஆனது தானாக மூடிக் கொண்டது செய்வது என்ன என்று புரியாமல் தம்பதியர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து நான்காவது மாடியில் குடியிருந்த சபரிநாதனே வீட்டின் கதவை உடைத்து தம்பதியினர் பத்திரமாக மீட்டனர் பின் எரிவாயு கசிவை சரி செய்தனர் பூட்டிய வீட்டுக்குள் எரிவாயு கசிவு உடன் சிக்கிய தம்பதிகளை இருந்து மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர் சில மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்