Home செய்திகள் மதுரை எஸ்எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட CCTV கேமராக்கள் பொறுத்தப்பட்டது

மதுரை எஸ்எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட CCTV கேமராக்கள் பொறுத்தப்பட்டது

by mohan

மதுரை மாநகரில் குற்றச்சம்பங்களை கட்டுப்படுத்தவும், குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்கும் மதுரை மாநகர் பகுதிகளில் வார்டு வாரியாக காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை எஸ்எஸ் காலனி காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திப்புகளான, மாடக்குளம், மாடக்குளம் மெயின் ரோடு பொன்மேனி நேருநகர் சந்திப்பு, பைபாஸ் ரோடு மற்றும் தலைவர்களின் சிலைகள் அருகே என 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தன்னார்வலர்கள் உதவியுடன் 62 அதிநவீன வசதிகள் கொண்டCCTV கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் வாகன நிறுத்தம் இல்லாத பகுதியில் வாகனங்களை நிறுத்தும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டும், தலைவர்களின் சிலைகள் அருகே அநாவசியமாக செல்லும் நபர்களின் முகங்களை அடையாளம்காண முடியும் வசதி கொண்டுள்ளது.மேலும், குற்றவாளிகளின் புகைப்படத்தை சேமிப்பு கருவியில் முன்னதாக பதிவிடும் பட்சத்தில் அவர்களின் முகத்தை எளிதில் அடையாளம் கண்டறிந்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் முடியும், இதனை மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா திறந்து வைத்தார். உடன் திலகர்திடல் சட்டஒழுங்கு காவல் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் எஸ் எஸ் காலனி சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பீவர் ஷீலா குற்றபிரிவு காவல் ஆய்வாளர். மருத்துவர் சக்கரவர்த்தி ஆகியோர்களுடன் பொதுமக்களும் பங்கேற்றனர். காவல் ஆணையாளர் பேசுகையில். மதுரை மாநகர் முழுவதும் இதுபோன்ற அதிநவீன கேமராக்கள் மிக விரைவில் பொருத்தப்படும் எனவும் மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் ஒவ்வொரு இல்லங்களில் இரண்டு கேமராக்கள் ஆவுது பொருத்த வேண்டும் எனவும் கேமரா பொருத்துவதால் குற்றங்கள் பெருமளவு குறைந்து வருவதாகவும் என்ன தெரிவித்தார்.பின்னர் நன்கொடை வழங்கிய தன்னார்வளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com