
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு 30க்கும் மேற்பட்டோர் காயம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன் குளத்தில் விஜய்கரிசல்குளத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கு மேற்பட்ட அறைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது இன்று (12.02.2021) மதியம் ஒன்று முப்பது மணி அளவில் மணி மருந்து உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது
பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில் 4 அருகில் முற்றிலும் தரைமட்டமானது. அடுத்தடுத்த அறைகளில் பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதில் பல அறைகள் முற்றிலும் சேதம் அடைத்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சிதறிக்கிடந்த அறைகளில் இருந்து சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரண்டு பேரும், சாத்தூர் அரசு மருத்துவமனையில் 26 பேரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் 10 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அடையாளம் தெரியாத ஒருவர் சிவகாசி மருந்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை கண்டறிந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் பணியும் நடைபெற்று வருகிறது இந்த வெடி விபத்து குறித்து வெம்பகோட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் தலைமறைவு ஆகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆர்டிஓ மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு இந்திய பிரதமர் நிதியுதவியும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.