
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 121.80 கோடி மதிப்பிலான கட்டிட பணிகள் துவங்க உள்ளது. அதில் புதிய தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்படவுள்ள டவர்பிளாக் கட்டடத்தில் 22 அறுவை சிகிச்சை நிலையங்கள், 26 பேர் வரை செல்லக்கூடிய மின் தூக்கிகள், சூரிய ஒளி மூலம் சுத்திகரிக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை அடங்கியதைகாணொலி(offline mode) காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைத்தார் .அதனை செல்லூர் கே ராஜூ மற்றும் ஆர் பி உதயகுமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராம், ஆர்.பி.உதயகுமார், S.S.சரவணன் MLA மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.